தமிழ்நாடு

எம்.ஜி.ஆருக்கு நினைவுச் சின்னம்: ஓ.பன்னீர்செல்வம்

எம்.ஜி.ஆருக்கு நினைவுச் சின்னம்: ஓ.பன்னீர்செல்வம்

webteam

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அவரது உருவச்சிலையுடன், நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் மாதம் 8 மற்றும் 9 ம் தேதிகளில், சென்னையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் எம்ஜிஆரின் நூற்றாண்டு ‌விழா கொண்டாடப்படும் என கூறியுள்ளார். எம்ஜிஆருடன் இணைந்து பணியாற்றிய திரைப்படக் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும், அவரது சாதனைகளை விளக்கும் விதமாக, நிரந்தர கணினி வழிக் கண்காட்சி உருவாக்கப்படும் எனவும் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நுண்கலை‌ப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆரின் பெயரில் திரைப்படக் கலை ஆய்வு இருக்கை ஏற்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.