தமிழ்நாடு

தர்மயுத்தம் தொடரும்: ஓபிஎஸ்

தர்மயுத்தம் தொடரும்: ஓபிஎஸ்

webteam

கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் பிடியில் செல்வதைத் தடுப்போம் என்றும், மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் வரை தர்ம யுத்தம் தொடரும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது, கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தில் பிடிக்குள் செல்வதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று பேசினார். முன்னாள் அமைச்சர்களான பொன்னையன் மற்றும் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.