தமிழ்நாடு

சந்திரபாபு நாயுடுவுக்கு ஓபிஎஸ் கடிதம்: கிருஷ்ணா நீரை திறக்கக் கோரிக்கை

சந்திரபாபு நாயுடுவுக்கு ஓபிஎஸ் கடிதம்: கிருஷ்ணா நீரை திறக்கக் கோரிக்கை

webteam

சென்னை குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கிருஷ்ணா நதி நீரை உடனடியாக வழங்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், வடகிழக்குப் பருவமழை குறைவினால், சென்னை நகரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது கண்டலேறு அணையில் 13.53 டி.எம்.சி நீர் இருப்பு உள்ள நிலையில் சென்னைக்கு உடனடியாக நீரைத்திறந்து விடுவதில் எந்த சிக்கலும் இருக்காது என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, உடனடியாக கண்டலேறு அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து விட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 1983ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் ஆண்டொன்றிற்கு 12டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு தர ஆந்திர அரசு ஒப்புக்கொண்டுள்ளதையும் ஒ. பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.