தமிழ்நாடு

நீதிப்பயணம் செல்லும் பன்னீர்செல்வம்

நீதிப்பயணம் செல்லும் பன்னீர்செல்வம்

webteam

நீதி கேட்டு தமிழக மக்களை சந்திக்க பன்னீர்செல்வம் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அவரின் ஆதரவு எம்எல்ஏ செம்மலை கூறியுள்ளார்.

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில், பன்னீர்செல்வம் இல்லத்தில் மாஃபா பாண்டியராஜன், செம்மலை, பொன்னையன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதி மக்களின் கருத்தைக் கேட்டும், நம்பிக்கை வாக்கெடுப்பில் மனசாட்சிப்படியும் வாக்களிக்க வேண்டும் என்று கூறினர். மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆட்சி விரைவில் மலரும் என்று கூறிய அவர்கள், பன்னீர்செல்வம் நேர்மையானவர், எளிமையானவர் அவர்தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வரவேண்டும் எனக் கூறினர்.

அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறுகையில், தற்காலிக பொதுச்செயலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை. எங்களை பதவி நீக்கம் செய்தது செல்லாது, எனவே நாங்கள் அதே பதவியில்தான் நீடிக்கிறோம் என்றார்.