தமிழ்நாடு

பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

Sinekadhara

பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நான்குபேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் பட்டாசு தொழிற்சலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 12 பேர் உயிரிழந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஓ பன்னீர்செல்வம், இதற்கு காரணம் பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றாததே என இந்த துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை ஆராயவும், விபத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண உதவியை உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் ஆவண செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.