தமிழ்நாடு

சிவாஜி மணிமண்டபம்: ஓபிஎஸ் திறந்து வைக்கிறார்

சிவாஜி மணிமண்டபம்: ஓபிஎஸ் திறந்து வைக்கிறார்

webteam

சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார்.

நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டியுள்ளது. இதன் திறப்பு விழா அக்டோபர் 1-ம் தேதி நடக்க இருப்பதாகவும் இதை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ’சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பது, ஜெயலலிதாவின் கனவு திட்டம். அவர் உயிருடன் இருந்திருந்தால் விழாவுக்கு தலைமையேற்று மணிமண்டபத்தை திறந்து வைத்து எங்கள் தந்தையின் ஆத்மாவுக்கு பெருமை சேர்த்து இருப்பார். தமிழக அரசு, சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்து இருப்பது மகிழ்ச்சி. அதே நேரம் முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ தலை சிறந்த நடிகரின் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது’ என்று நடிகர் பிரபு கூறியிருந்தார். நடிகர் சங்கமும் இதை வலியுறுத்தி இருந்தது. 

இதையடுத்து துணை முதலமைச்சர் ஓபிஎஸ், சிவாஜி மணிமண்டபத்தை திறக்க இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அன்று வெளியூர் நிகழ்ச்சியில் இருப்பதால் தான் கலந்துகொள்ள இயலவில்லை என்றும் ஜெயக்குமார் தலைமையில் நடக்கும் விழாவில் கடம்பூர் ராஜூ முன்னிலை வகிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பெயரை இணைத்து இன்று  புதிய அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது.