தமிழ்நாடு

கிணற்றை அன்பளிப்பாக தர உள்ளேன்: ஓபிஎஸ்

கிணற்றை அன்பளிப்பாக தர உள்ளேன்: ஓபிஎஸ்

webteam

தேனி, பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள எனது கிணறு, நிலத்தை கிராம மக்களுக்கு அன்பளிப்பாக தர உள்ளேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில் குடிநீர் கிணறு அருகே ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான தோட்டத்தில் ராட்சத கிணறு வெட்டப்பட்டுள்ளது. ஓபிஎஸ்.க்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணறு தோண்டப்பட்டு, ஆழ்துளையிட்டு தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் லட்சுமிபுரம் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணறுகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கிராம மக்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் கடந்த வாரம் போலீசார் முன்னிலையில், ஓபிஎஸ் தரப்பில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், சொந்தமான கிணற்றுடன் கூடிய 40 ஏக்கர் நிலத்தை கிராம மக்களுக்கு அன்பளிப்பாக தர, தாம் தயாராக உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.