விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நாளை நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி ஆதரவளித்துள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது உட்பட, விவசாயிகளுக்காக ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறி, அவற்றை விவரித்துள்ளார்.
நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தும் விவசாயிகளையும், பொதுமக்களையும், மாணவர்களையும் காவல்துறையினர் தடுப்பது கவலையடையச் செய்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அறவழியில் போராடும் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.