ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணியினரின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. 108 அம்சங்கள் இடம்பெற்ற தேர்தல் அறிக்கையினை முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்..
இந்தியாவிலேயே முதன் முறையாக நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் அமைக்கப்படும்
எழில்நகர் பகுதியில் சுற்றுலா மையம் அமைக்கப்படும்
முதியோருக்கு ஓய்வூதியம் தடையின்றி வழங்க நடவடிக்கை
ஆர்.கே.நகரில் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்றி அமைக்கப்படும்
ஆர்.கே.நகரில் உள்ள அரசு கல்லூரி உலகத் தரத்திற்கு மாற்றப்படும்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் நியமிக்க நடவடிக்கை
ஆர்.கே.நகர் தொகுதியில் பெண்களை தொழில் முனைவோர் ஆக்க நடவடிக்கை
ஆர்.கே.நகர் தொகுதியில் மேலும் 2 உயர்நிலைப் பள்ளிகள், 1 மேல்நிலைப் பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்
ஆர்.கே.நகர் தொகுதியில் பொதுத்துறை வங்கிகள், நூலக வசதி ஏற்படுத்தப்படும்
அனைவருக்கும் பட்டா, தடையின்றி மின்சாரம், பாதுகாப்பான குடிநீர் தரப்படும்
அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்
மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு பயிற்சி தந்து வேலை கிடைக்க ஏற்பாடு