தமிழ்நாடு

"ஆதாரத்தை காட்டினால் அரசியலை விட்டு விலக தயார்" - இபிஎஸ்-க்கு ஓ.பி.எஸ் விடுத்த சவால்!

Abinaya

அ.தி.மு.க.வை பன்னீர்செல்வத்தை வைத்து முதல்வர் ஸ்டாலின் அழிக்க நினைக்கிறார் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஓ.பி.எஸ், முதல்வர் ஸ்டாலினுடன் தான் பேசிய ஆதாரத்தை காட்டினால் அரசியலை விட்டு விலக தயார் என ஓ.பி.எஸ் தெரித்துள்ளார். 

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இடையில் பூதாகரமாக வெடித்து வருகிறது. அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ் நிக்கப்படுவதாக ஈ.பி.எஸ் ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில், மேலும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்கப்படுவதாகவும் அறிவித்து இதை குறித்து சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்.

ஆனால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற பதவி அங்கீகரிக்கப்பட்ட பதவி இல்லை என நடப்பு சட்டசபை தொடரில் சபாநாயகர் அப்பாவு அறிவித்துவிட்டார். சபாநாயகரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டபேரவையில் இபிஎஸ் தரப்பு அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்க சபாநயகரிடம் கடிதத்தை அளித்து மூன்று மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டமன்றத்தில் கட்சிக்காரர் போல ஸ்டாலின் சொல்வதை கேட்டு சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.

இதுதொடர்பான அவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்ட போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்து நிலையிலும், தடையை மீறி போராட்டத்தை நடத்தினர். இதன் பின்னர், ஈ.பி.எஸ் உட்பட போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வத்தை எப்பவோ நீக்கிவிட்டோம் அவரை எப்படி எதிர்கட்சி துணைத்தலைவரகாக ஏற்றுகொள்ள முடியும்? அவர் இப்போது திமுகவுடன் சேர்ந்து செயல்படுகிறார். அதிமுகவை அழிக்க பார்க்கிறார். சட்டசபை முடிந்தவுடன் முதல்வர் ஸ்டலினிடம் ஓ.பன்னீர் செல்வம் அரைமணி நேரம் பேசியுள்ளார். அதிமுகவை அழிக்க ஸ்டாலின் திட்டமிடுகிறார். ஆனால் அவரது எண்ணம் ஒருநாளும் பலிக்காது”
என பேசினார் எடப்பாடி பழச்சாமி.

இதுகுறித்து ஓபிஎஸ் கூறுகையில், ‘முதல்வர் ஸ்டாலினுடன் நான் பேசியதற்கு ஆதரம் கொடுத்தால், நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன். ஆனால் கொடுக்கவில்லை என்றால் எடப்பாடி பழச்சாமி அரசியலை விட்டு விலக தயாரா?” என கேட்டுள்ளார்.

இதுகுறித்து ஓ.பி.எஸ் பேசிய முழு காணொளியை இங்கே காணலாம் :