ஓபிஎஸ்
ஓபிஎஸ் கோப்புப்படம்
தமிழ்நாடு

“அதிமுகவில் உள்ள பல பிரிவுகள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும்” - ஓபிஎஸ்

webteam

செய்தியாளர் - ஜி.பழனிவேல்
_______

கிருஷ்ணகிரியில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஓபிஎஸ்-இபிஎஸ்

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவின் பொதுச் செயலாளரை அதிமுகவின் சாமானிய தொண்டன் தேர்வு செய்ய வேண்டும் என்ற சட்டதிட்டம் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டது. இன்று எடப்பாடி பழனிசாமியால் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள்யாவும் காலில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது. இதை மீட்பதற்காகதான் தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்த பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அவர் தோல்வியையே தழுவியுள்ளார். அதிமுகவில் உள்ள பல பிரிவுகள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் கொள்கை ரீதியாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சசிகலா அவர்களுக்கும் அந்த எண்ணம் உள்ளது. இதுகுறித்து சசிகலாதான் முடிவு செய்ய வேண்டும். அதிமுகவின் தொண்டர்கள் இணைந்து செயல்பட தயாராக உள்ளனர். யாராக இருந்தாலும் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும்,

ops, ttv dhinakaran

நாங்கள் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்திக் கொண்டே இருப்போம். திமுக அரசு மிகவும் மோசமாக உள்ளது. செவிடன் காதில் ஊதிய சங்கு போல்தான் இருக்கிறது. எதையும் கண்டு கொள்வதில்லை” என தெரிவித்தார்.