செய்தியாளர்: K.கருப்பஞானியார்
அதிமுகவை ஒருங்கிணைப்பது மற்றும் கூட்டணி குறித்து மூத்த நிர்வாகிகள் இடையே பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், இன்று சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், முன்னாள் முதல்வரும், அதிமுக உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தனது குலதெய்வமான செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார்.
ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த ஓ. பன்னீர் செல்வத்திடம், அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “கோயிலுக்கு வந்த இடத்தில் அரசியல் பேசக்கூடாது” என்று தெரிவித்தார்.