ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலம் முழுவதும் உள்ள ஓட்டல்களை வரும் 30ஆம் தேதி மூட முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய அச்சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பு ஜிஎஸ்டி முறையால் உணவுகளின் விலை பல மடங்கு உயரும் என கூறினார். எனவே வரி விதிப்பு குறித்து மத்திய அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், மத்திய அரசின் ஆன்லைன் மருந்து விற்பனை சட்டத்தை எதிர்த்து மருந்து வணிகர்கள் வரும் 30ம் தேதி தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இச்சட்டத்தால் தங்கள் துறை பாதிக்கப்படும் எனக் கூறி தமிழகத்தில் 30 ஆயிரம் மருந்துக்கடைகளும் அகில இந்திய அளவில் 8 லட்சம் கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.