2026-27ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்த நிலையில், இன்று அமைச்சர் ஆர்.வினோத் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, தமிழக விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், பல அறிவிப்புகளையும் வெளியிட்டார். இந்த நிலையில், தவெக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
”வறட்சி பற்றிப் பேசாமல், புகழ்ச்சிப் பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டு மழை பொழியப் பயன்பட்டதுதான் வேளாண் பட்ஜெட்; திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் ’வெற்றி’ என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?”
”தவெகவின் வேளாண் பட்ஜெட் மீது விவசாயிகள் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தனர்; ஏமாற்றமே மிஞ்சியது. கடந்தகால ஆட்சியில் என்ன நிலை இருந்ததோ, இதே நிலைதான் நெல் கொள்முதல் நிலையங்களில் இருக்கிறது. விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் இது; வேளாண் பட்ஜெட் எனும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்”.
”இதை வேளாண் பட்ஜெட் என்று சொல்வதைவிட, முழுக்கமுழுக்க முதலமைச்சருக்கு ஜால்ரா அடித்துள்ளார் வேளாண் அமைச்சர் வினோத். இந்த பட்ஜெட்டில் புதிதாக என்று சொன்னால் எதுவுமே இல்லை. பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டனர்”.
”விவசாயிகள் எதிர்பார்த்த முக்கியத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இல்லை. மாற்றம் தருவோம் என்று சொன்னவர்கள் எந்த மாற்றமும் தரவில்லை. பல ஆண்டுகளக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து திட்டங்களை அறிவித்துள்ளனர். கருவேல மரங்களை நீக்கை அதனை விளைநிலங்களாக மாற்றி மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதுபோன்ற புதிய திட்டங்களை எதிர்பார்த்தோம்”.