நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இயக்குநர் வெற்றிமாறன், எதிர்ப்பை வெளிப்படுத்துவது மாணவர்களின் அடிப்படை உரிமை எனக் கூறியுள்ளார்.
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன், “எல்லா அரசுகளும் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்க வேண்டும். முதலில் நாம் நம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
இந்த மவுனத்தை களைக்க வேண்டும். இது அவர்கள் உரிமைக்காக குரல் கொடுப்பது. இது அவர்களுடைய அடிப்படை உரிமை. எல்லா மனிதர்களுக்கும் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான உரிமை உள்ளது. பிறப்புரிமை அது. அதனை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்க்ள்” என்று கூறினார்.