தமிழ்நாடு

கோடநாடு விவகாரம்: பாதுகாப்பு வழங்க காவல் கண்காணிப்பாளருக்கு சயான் மனு

கோடநாடு விவகாரம்: பாதுகாப்பு வழங்க காவல் கண்காணிப்பாளருக்கு சயான் மனு

kaleelrahman

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயான், தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் பின் தொடர்வதாகவும், அதனால் தனக்கு பாதுக்காப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தபால் மூலம் மனு அனுப்பியுள்ளார்.

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, மாநில வர்தகப் பிரிவு செயலாளர் சஜீவன், தடவியல் நிபுணர் இராஜமோகன், கோத்தகிரி மின்வாரிய உதவி பொறியாளர் மற்றும் பங்களா மேலாளர் நடராஜன் உள்ளிட்ட பலரிடம் விசாரிக்க வேண்டும் என்று கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சயான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில்,

கடந்த சில நாட்களாக தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்ந்து வருவதால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமை சயான் மாவட்ட காவல் காணிப்பாளர் அலுவலகத்திற்கு தபால் மூலம் மனு அனுப்பியுள்ளார்.