தமிழகத்தில் கோயில்களில் நடைபெறும் திருமண நிகழ்வுகளில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை என கோயில் நிர்வாகத்தினருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது இந்து சமய அறநிலையத்துறை. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி கோயிலுக்குள் நடைபெறும் திருமண நிகழ்வுகளுக்கு பத்து பேரும், கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
திருமண நிகழ்வுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே திருமண நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் அறநிலையத்துறை இந்த புதிய கட்டுப்பாட்டை அமல் படுத்தி உள்ளது.