தமிழ்நாடு

ஒரே ஒரு ஓட்டு வித்தியாசம் - திமுகவை தோற்கடித்த பாஜக வேட்பாளர்!

ஒரே ஒரு ஓட்டு வித்தியாசம் - திமுகவை தோற்கடித்த பாஜக வேட்பாளர்!

கலிலுல்லா

ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை பாஜக வேட்பாளர் தோற்கடித்துள்ளார்.

நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான மாநகராட்சிகளையும், நகராட்சிகளையும், பேரூராட்களையும் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் 3வது வார்டில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கோபிநாத் திமுக வேட்பாளரை விட 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முன்னதாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள பதினைந்து வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 11 வது வார்டில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 162 வாக்குகள் பதிவாகின. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நரேந்திரன் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நரேந்திரன் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளதால் பவானிசாகர் பகுதியில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இன்று பரப்பாக பேசப்பட்டது. மாநகராட்சி, நகராட்சிகளில் ஒரு இடங்களில் பாஜக வெற்றிபெறாத நிலையில் 6 பேரூராட்களில் வெற்றி பெற்றுள்ளது.