இபிஎஸ் pt
தமிழ்நாடு

” பாஜகவுடன் கூட்டணி மட்டுமே; கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை “ - அதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்!

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே; கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல் தொடங்கி நடபெற்று வருகிறது. அப்போது 3 அமைச்சர்கள் மீது அதிமுக கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் அப்பாவு, தீர்மானம் நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அது பரிசீலனையில் உள்ளது.

'பாஜகவுடன் கூட்டணி மட்டுமே;கூட்டணி ஆட்சி கிடையாது'- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

இன்றைக்கு மற்ற அலுவல்கள் இருப்பதால், அதை விவாதத்திற்கு எடுக்க முடியாது என தெரிவித்தார். சபாநாயகரின் பதிலை ஏற்க மறுத்து சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ” பாஜகவுடன் கூட்டணி மட்டுமே ; தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ரு அமித்ஷா கூறவில்லை.

டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்றுதான் அமித்ஷா கூறினார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்சாவும் கூறவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? திமுகவுக்கு பயம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி “ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வெற்றி பெற்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது தொடர்பாக தற்போதைக்கு எதுவும் கூறமுடியாது எனத் தெரிவித்திருந்தார், இப்படியான சூழலில், அதிமுக எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில பாஜகவுடன் கூட்டணி ஆட்சி இல்லை என்று தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.