பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி பொதுக்கலந்தாய்வு web
தமிழ்நாடு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி பொதுக்கலந்தாய்வு தொடக்கம்!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி பொதுக்கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.

PT WEB

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி பொதுக்கலந்தாய்வு இன்று தொடங்கியது. 440க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 80ஆயிரம் இடங்களுக்கு, அரசு ஒதுக்கீட்டில் சேர இரண்டரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

3 சுற்றுகளாக ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் நிலையில், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய வரும் 22ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.