தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்பு: ஏழை அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கிய ஆட்சியர்

kaleelrahman

ஆன்லைன் பாடம் படிக்க ஏழை அரசுப் பள்ளி மாணவிகளுக்கு 20 ஸ்மார்ட்போன்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரனோ நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட்போன் இல்லாததால் அரசுப் பள்ளி மாணவிகள் பாதிப்பு அடைந்தனர். இதைக் கருத்தில் கொண்டு செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு புத்தொளி அமைப்பின் மூலமாக 20 ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டது.

இதை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மாணவிகளுக்கு இன்று வழங்கினார். ஸ்மார்ட்போன் வழங்கிய மாவட்ட ஆட்சியர் மாணவிகள், கல்வி தொலைக்காட்சியை பார்க்கவும் ஸ்மார்ட்போன் மூலமாக பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாகவும் படிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.