தமிழ்நாடு

ஸ்ரீவில்லிப்புத்தூர் தென்திருப்பதி கோவில் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு

kaleelrahman

ஸ்ரீவில்லிப்புத்தூர் தென்திருப்பதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வரும் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென்திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு மற்றும் ஆணையரின் வழிகாட்டுதலின்படி திருக்கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியோடு தரிசனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டும் கட்டணமில்லா சேவை மற்றும் கட்டண சேவை தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதற்காக www.tnhrce.gov.in என்ற ஆன்லைன் வசதியை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.. நான்குசக்கர மற்றும் ,இருசக்கர வாகனங்களில்வர அனுமதியில்லை எனவும் அரசுப் பேருந்துகளில் மட்டுமே வர அனுமதி. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.