தமிழ்நாடு

ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.13‌0-க்கு விற்பனை

ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.13‌0-க்கு விற்பனை

jagadeesh

தமிழகத்தில் பெரிய வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 130 ரூபாய் என்ற உச்சவிலையைத் தொட்டுள்ளது. அதேபோல, சின்ன வெங்காயமும் ஒரு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிலோவிற்கு 30 ரூபாய் அதிகரித்து 130 ரூபாய் என விலை அதிகரித்துள்ளது. அதேபோல, சின்ன வெங்காயமும் கிலோவிற்கு 40 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வடமாநிலங்களில் கனமழையால் விளைச்சல் பாதியாகக் குறைந்ததே விலை ஏற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. வழக்கமாக சந்தைக்கு நாளொன்றுக்கு 20 டன் எடை கொண்ட 1‌00 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு வந்த நிலையில், தற்போது 35 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதிலும், தரமற்ற வெங்காயமே அதிகமாக வருவதால் விலை அதிகரித்துள்ளதா‌கக் கூறுகின்றனர்.