தமிழ்நாடு

வரத்து குறைவால் வெங்காயம் விலை கடும் உயர்வு

jagadeesh

வெங்காயத்தின் விலை மீண்டும் கடும் உயர்வை சந்தித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 96 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. 

வெங்காய உற்பத்தியில் முன்னணி வகிக்கும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்ததே பெரிய வெங்காயம் விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். உள் மாவட்டங்களில் அதிகளவு விளைவிக்கப்படும் சின்ன வெங்காயம் பதுக்கல் காரணமாக விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து 1.2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், அவை இன்னும் வந்து சேரவில்லை.