தமிழ்நாடு

பெரிய வெங்காயத்தின் விலை சற்று குறைவு

பெரிய வெங்காயத்தின் விலை சற்று குறைவு

webteam

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வரத்து அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

தொடர் மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்காலிகமாக வெங்காய விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக மொத்த விற்பனையாளர்களும், வெங்காயம் கையிருப்பு வைத்திருந்தால் அவர்கள் மீதும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வெங்காயம் விலை சற்று குறைந்துள்ளது. அதாவது ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 70 ரூபாயில் இருந்து 66 ரூபாயாக குறைந்துள்ளது. அதே வேளையில் சின்ன வெங்காயம் கிலோ 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட், 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.