தமிழ்நாடு

ஓ.என்.ஜி.சி. குழாயில் எண்ணெய் கசிவு: கதிராமங்கலம் மக்கள் போராட்டம்

ஓ.என்.ஜி.சி. குழாயில் எண்ணெய் கசிவு: கதிராமங்கலம் மக்கள் போராட்டம்

webteam

கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் செயல்படும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டதால் அச்சமடைந்த அக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கதிராமங்கலத்திலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை கொண்டு செல்ல குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. வனதுர்க்கை அம்மன் கோவில் அருகே போடப்பட்டுள்ள ஓ.என்.ஜி.சி. குழாயில் எண்ணெய் மற்றும் வாயுக் கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற சம்பவம் நடந்ததால், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கிராமத்திலிருந்து அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைப்பட்டன. ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்‌டனர்‌. கசிவு ஏற்பட்ட குழாயை சரிசெய்யும் பணியில் ஓ.என்.ஜி.சி நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டனர்.