தமிழ்நாடு

நெடுவாசலில் 174 நாளாக நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

rajakannan

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 174 நாளாக நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் உட்பட நாடு முழுவதுமுள்ள 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. நெடுவாசல் பகுதியில் ஹட்ரோ கார்பன் எடுப்பதற்கு கடந்த பிப்ரவரி மாதம் அப்பகுதி மக்கள் மற்றும் போராட்டக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டம் நிறுத்தப்பட்டது. 

இதனையடுத்து, நெடுவாசல் போராட்டக் குழுவினர் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இரண்டாம் கட்ட போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் 100 நாள்களுக்கு மேலாகியும் இவர்களுக்கு தீர்வு ஏதும் காணப்படவில்லை. தொடர் போராட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெற விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். ஒன்ஜிசி மீண்டும் தன் பணிகளை தொடங்குமானால் மீண்டும் போராட்டம் தொடங்கும் என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்.