தமிழ்நாடு

வைரமுத்து மீது மேலும் ஒரு வழக்கு!

வைரமுத்து மீது மேலும் ஒரு வழக்கு!

webteam

ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்து மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்துக்கு பலதரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக வைரமுத்து மீது சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமுதாய நல்லிணக்க பேரவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வைரமுத்து மீது 3 பிரிவுகளில் கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்திலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைரமுத்து மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவர் பிரமுகர் வேணுகோபால் தந்த புகாரின் பேரில், ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக ஆர்.கே நகர் காவல்நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.