புதுக்கோட்டையில் ஒரு மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் இளைஞர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் இச்சடி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற குப்பிடையான் பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், மணல் ஏற்றி வந்த டாடா ஏஸ் லாரி மோதியதில் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்பிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்து 1 மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் வரவில்லை. பின்னர் அந்த இளைஞர் உயிரிழந்தார். ஆத்திரமடைந்த ஊர் மக்கள் தடுப்புகளை வைத்து போக்குவரத்தை நிறுத்தினர்.
இதனால் புதுக்கோட்டை தஞ்சாவூர் செல்லும் பிரதான சாலையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் கூறுகையில், அடிபட்டு உயிருக்கு பேராடிய நிலையில் ஆம்புலன்ஸ் வராததே உயிர்போக காரணம் என்றும், சில கிலோ மீட்டர் தொலைவில் மருத்துவ கல்லூரி இருந்தும் இந்த நிலையா? என்றும் ஆதங்கம் தெரிவித்தனர்.