தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: மயில் முட்டை எடுக்க கிணற்றில் இறங்கிய சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: மயில் முட்டை எடுக்க கிணற்றில் இறங்கிய சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

JustinDurai
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, மயில் முட்டை எடுப்பதற்காக கிணற்றில் இறங்கிய இரண்டு சிறுவர்களில் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
போச்சம்பள்ளியை அடுத்த ஓலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சவுக்கத் மற்றும் சுதாகர் ஆகிய இரு சிறுவர்களும், சிப்காட்டிற்கு சொந்தமான சுமார் 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இறங்கியபோது பாம்பு இருப்பதைக் கண்டு பயந்து தண்ணீரில் விழுந்துள்ளனர்.
இதில் நீச்சல் தெரியாத சவுக்கத் பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, அக்கிணற்றை மூடக்கோரி, பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்த அதிகாரிகள், சிறுவன் சவுக்கத் உடலை போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.