தமிழ்நாடு

ஹோட்டலுக்குள் இளைஞர் வெட்டிக் கொல்லபட்ட சம்பவத்தில் 4 பேர் சரண்

ஹோட்டலுக்குள் இளைஞர் வெட்டிக் கொல்லபட்ட சம்பவத்தில் 4 பேர் சரண்

Rasus

திருத்தணியில் ஹோட்டலுக்குள் புகுந்த இளைஞர் கொல்லபட்ட சம்பவத்தில் 4 பேர் சரண் அடைந்துள்ளனர்.

திருத்தணி நீதிமன்ற வளாகம் அருகே மகேஷ் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டியது. அப்போது அருகில் இருந்த ஹோட்டலுக்குள் புகுந்து மகேஷை 4 பேர் கொடூரமாக வெட்டியதில் அவர் உயிரிழந்தார். கைப்பந்து போட்டியில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து, சிசிடிவி காட்சி‌களை அடிப்படையாக கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த 4 பேர் திருத்தணி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர். விமல்ராஜ், கோபிராஜ், ராஜ்குமார், மற்றும் அஜித்குமார் ஆகிய இந்த நான்குபேரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.