திண்டுக்கல்லில் பழிக்குப் பழியாக பட்டப்பகலில் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டார்.
சித்தையன்கோட்டையைச் சேர்ந்த ஜமால்முகமது என்பவர், பொதுப்பணித்துறை குளத்தை ஏலம் எடுப்பது தொடர்பாக கடந்த 2015-ஆம் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சொக்கலிங்கபட்டியைச் சேர்ந்த செல்வகுமார், மருதுபாண்டி, முத்துப்பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்பொழுது 3 பேரும் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.
3 பேரும் நேற்று திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வத்தலக்குண்டு சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் 3 பேரும் தடுமாறி கிழே விழுந்தனர். பின்னர் காரில் வந்தவர்கள் 3 பேரையும் சரமாரியாக வெட்டினர். இதில் செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற 2 பேரும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜமால்முகமது கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.