தமிழ்நாடு

பார் ஊழியர் தள்ளிவிட்டதில் முதியவர் பலி !

பார் ஊழியர் தள்ளிவிட்டதில் முதியவர் பலி !

Rasus

மதுரவாயலில் டாஸ்மாக் பார் சூப்பர்வைசர் தள்ளிவிட்டதில் முதியவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரவாயல் மேட்டுக்குப்பம், பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதனை ஒட்டி டாஸ்மாக் பாரும் உள்ளது. இந்தநிலையில் இந்த பாரில் தங்கி வேலை செய்து வந்த முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த முதியவரின் உடலை மீட்டு, விசாரணை செய்தனர். இதில் முதியவர் தலையின் பின் பகுதியில் ரத்தக் காயம் இருந்தது.

இதுகுறித்து விசாரணை செய்தபோது, பார் சூப்பர்வைசர் ராஜா என்பவர் தள்ளிவிட்டதால் முதியவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர். அதில் அந்த முதியவர் பல வருடங்களாக இந்த பாரில் தங்கி வேலை செய்து வந்துள்ளார் என்பதும், நேற்று மாலை வேலைக்கு தாமதமாக வந்ததால் பார் சூப்பர்வைசர் ராஜா அந்த முதியவரை பிடித்து கீழே தள்ளியதில் முதியவர் இறந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ராஜவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து 24 மணி நேரமும் இங்கு மது விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. அதற்கு உதாரணமாக, டாஸ்மாக் பாரில் கொலை நடந்து போலீசார் சடலத்தை எடுத்து சென்றபிறகும் மது விற்பனை தங்கு தடையின்றி நடந்து வருகிறது.