தமிழ்நாடு

தேனி அருகே சாலை விபத்து: சினிமா புகைப்பட கலைஞர் உயிரிழப்பு

தேனி அருகே சாலை விபத்து: சினிமா புகைப்பட கலைஞர் உயிரிழப்பு

webteam

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே நடைபெற்ற விபத்தில், தொலைக்காட்சி தொடரின் கேமராமேன் சிவா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பையில் தனியார் தொலைக்காட்சியின் சீரியல் படப்பிடிப்பு நடந்துள்ளது. படப்பிடிப்புக்கு வந்தவர்கள் கோம்பை ரெங்கநாதர் கோவில் சாலையில் வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த ஸ்டில் கேமராமேன் சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன் ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகர் குரும்பன் காயமடைந்தார். அவர் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த சிவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.