கடலூர் மாவட்டம் மந்தாரகுப்பம் ரயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மந்தாரகுப்பம் ரயில்நிலைய அதிகாரிக்கு வந்த அந்த மிரட்டல் கடிதத்தில், டிசம்பர் 6-ஆம் தேதிக்குள் வெவ்வேறு ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என எழுதப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை எழுதியவர், தாம் மீனாட்சிப்பேட்டையைச் சேர்ந்த கேசவன் என்பவரது இளைய மகன் என குறிப்பிட்டிருந்தார். அந்த கிராமத்தில் போலீஸார் விசாரணை நடத்திய போது, கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது போலவே கேசவன் என்ற நபர் வசித்து வருவது தெரியவந்தது. அவரது இளைய மகன் மணிமாறன் என்பவரைக் கைது செய்த போலீஸார், மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டலால் புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.