தமிழ்நாடு

கேரளா யானை கொல்லப்பட்ட‌ வழக்கு: ஒருவர் கைது

webteam

கேரளா யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரள மாநிலத்தில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது. சமூகத்தில் பல்வேறு தரப்பினரும் யானைக்கு இத்தகைய கொடூரத்தைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

யானையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், "யானை அதிகப்படியான நீரை உறிஞ்சியுள்ளது, இதன் காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டுச் செயலிழந்துவிட்டது. அதுவே யானை உடனடியாக உயிரிழந்ததற்கான காரணம். யானையின் வாய்ப் பகுதி வெடிபொருள்களால் வெடித்துள்ளது. அதனால் அதனுடைய வாய் பகுதி முழுமையாகக் காயப்பட்டு சீழ் பிடித்திருந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வலி, மன உளைச்சல் காரணமாக அந்த யானை கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்திருக்கிறது. இதனால் அந்த யானை முற்றிலுமாக சீர்குலைந்து நீரில் நின்று சரிந்து பின்பு மூழ்கியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரளா வனத்துறை தெரிவித்துள்ளது.