தமிழ்நாடு

கிருமிநாசினி தெளிப்பதைப் போல் நடித்து ஏடிஎம்மில் 20 லட்சம் கொள்ளையடித்தவர் கைது

கிருமிநாசினி தெளிப்பதைப் போல் நடித்து ஏடிஎம்மில் 20 லட்சம் கொள்ளையடித்தவர் கைது

webteam

கிருமிநாசினி தெளிப்பதாக ஏடிஎம்மில் ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வங்கி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த மதுரவாயலில் தனியார் வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. அந்த ஏடிஎம்மில் காவலாளி வெளியே அமர்ந்திருந்த நிலையில் ஆட்டோவில் வந்த ஒரு நபர், கிருமி நாசினி தெளிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். அவரை நம்பி உள்ளே விட்ட காவலாளி வெளியே காத்திருந்துள்ளார். உள்ளே சென்ற நபர் ஏடிஎம்மை திறந்து 20 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

ஏடிஎம் வெளியே பணம் எடுக்கக் காத்திருந்த மற்றொரு நபர் இது குறித்து காவலாளியிடம் தெரிவித்துள்ளார். பின்னர் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை உணர்ந்த காவலாளி வங்கி மேலாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் வங்கி ஏடிஎம் வழக்கில் வங்கி ஊழியர் ஒருவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்