தமிழ்நாடு

தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு : பரவும்.. பதட்டம்..

தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு : பரவும்.. பதட்டம்..

webteam

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் எஸ்பி முகாம் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இன்று 100-ஆவது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் தடுப்பை மீறி, போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கான பேரணியாக சென்றனர். அப்போது காவல்துறையினருக்கு, போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. பின்னர் போராட்டக்காரர்கள்  தடையை மீறி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். 

இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் பெண் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். ஜெயராமன், கிளாட்ஸன், கந்தையா, வினிஸ்டா, தமிழரசன், சண்முகம், மற்றும் மணிராஜ் உள்பட 9 பேரின் உடல் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தவிர்க்க முடியாத நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.