தமிழ்நாடு

ஓணம் பண்டிகை சமத்துவத்தின் அடையாளம் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஓணம் பண்டிகை சமத்துவத்தின் அடையாளம் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து

JustinDurai

ஓணம் திருநாள் சமத்துவத்தின் அடையாளமாகத் திகழ்கிறது என மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று ஓணம் பண்டிகையையொட்டி தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

''கேரளப் பெருமக்களின் பண்பாட்டுடனும், உணர்வுகளோடும் ஒன்றிப்போயிருக்கும் திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

“ஓணம் திருநாள்” பண்டிகை சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம், பேரன்பு, கொடை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது!

திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழகம் வாழ் மலையாள மக்களும்- கேரள மக்கள் அனைவரும் - ஆரோக்கியமான வாழ்வும் – அனைத்து வளங்களும் பெற்று எந்நாளும் இன்புற்றிருக்க வேண்டும் என்று “ஓணம் திருநாள்” வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்!''

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.