தமிழ்நாடு

ஓணம் பண்டிகை கொண்டாட்டம் : தேவாளை பூ விற்பனை அமோகம்

ஓணம் பண்டிகை கொண்டாட்டம் : தேவாளை பூ விற்பனை அமோகம்

webteam

கேரளா மக்களின் முக்கிய பண்டிகையான திருவோணம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேவாளை பூ சந்தையில் சிறப்பு விற்பனை அதிகாலையில் தொடங்கியது. 

அத்தப்பூ கோலமிட்டு, மகாபலி மன்னனை வரவேற்பது ஓணம் பண்டிகையின் முக்கியம்சம் என்பதால் கேரளாவிலிருந்து தோவாளை பூ சந்தைக்கு அதிகம் பேர் பூ வாங்க வந்துள்ளனர். வாடா மல்லி, ரோஜா ஆகியவை கிலோ 150 ரூபாய்க்கும், அரளி 80 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. ஆந்திரா, கர்நாடகா, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால், இந்தாண்டு பெரிய அளவில் விலை உயரவில்லை. கடந்தாண்டு, தோவாளை ஓணம் சிறப்பு சந்தையில் 400 டன்னுக்கும் அதிகமாக பூ விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு, இன்னும் கூடுதலாக விற்பனை நடைபெறும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.