தமிழ்நாடு

8 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்காக இயக்கப்பட்ட உதகை மலைரயில்!

kaleelrahman

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மலைரயில் இந்தி வெப்-பட சூட்டிங்கிற்காக குன்னூரில் இருந்து உதகை வழித்தடத்தில் இயக்கப்பட்டது.


நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்காளாக நீலகிரி மாவட்டத்தில் இயங்கிவந்த மலைரயில் சேவையை தெற்கு ரயில்வே ரத்து செய்தது. இந்த நிலையில் மும்பையை சேர்ந்த இந்தி படக்குழுவினர் தாங்கள் தயாரிக்கும் இந்தி வெப்டிவி தொடரில் மலைரயில் காட்சிகளை எடுக்க அனுமதி பெற்றிருந்தனர். இதைத் தொடர்ந்து குன்னூர் உதகை இடையே கேத்தி ரயில் நிலையம் பகுதியில் மலைரயிலின் காட்சிகள் படமாக்கப்பட்டன.


அப்டாப் லவ் என்ற வெப் படத்திற்காக நீலகிரி மலைரயில் கேத்தி ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது, சேலம் கோட்டத்தில் அனுமதி பெற்று நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு ரூ. 5 லட்சம் வைப்புத் தொகையாக கட்டியுள்ளனர். எஞ்சினுடன் 5பெட்டிகள் இணைக்கப்பட்டு மலைரயில் கேத்தி ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்ததை படக்குழுவினர் கேமராவில் பதிவுசெய்தனர்.


கடந்த 8மாதங்களாக இயங்காத மலைரயில் இயக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மலைரயிலை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். ஆனால் கேத்தி ரயில்நிலைய அறிவிப்பு பலகையில் படப்பிடிப்புக்காக என்று மட்டும் என்று எழுதப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.