ஆம்னி பேருந்து இயக்கம்
ஆம்னி பேருந்து இயக்கம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஆம்னி பேருந்து இயக்கம் - கோயம்பேட்டிலா கிளாம்பாக்கத்திலா? குழப்பத்தால் தவித்த பயணிகள்!

PT WEB

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை, புதன்கிழமை இரவு முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய இடவசதியில்லை என்றும், கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறினர்.

இந்நிலையில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்துக்கு வந்த சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் செல்லாதபடி தடுப்புகளை அமைத்தனர்.

இதனால் அதிகாரிகள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆம்னி பேருந்துகளை இயக்குவதில் குழப்பம் நீடித்ததால், முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.