சென்னை கிண்டியில், சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவற்றில் மோதி ஆம்னி பேருந்து விபத்திற்குள்ளானது.
மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த அந்தப் பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இன்று அதிகாலையில் நடைபெற்ற விபத்தில், பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்தை இயக்கியதே விபத்துக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பேருந்தை மீட்டு போக்குவரத்தை சீர்செய்தனர்.