சேலம் மாவட்டம் ஓமலூர், தும்பிபாடி ஏரிக்கு வரும் தண்ணீரை பார்த்த பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.
கடந்த 30 ஆண்டுகளாக வறண்டு கிடந்த தும்பிபாடி ஏரியில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் குறைந்தளவிலான காட்டுமேட்டு தண்ணீர் வந்துள்ளது. ஏரியில் ஆங்காங்கே உள்ள குழிகளில் மழைநீர் நிரம்பியுள்ளதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதை வைத்து சாகுபடியை தொடங்க முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். ஏரிக்கு வரும் நீர்வழிப்பாதைகள் சீராக இருந்திருந்தால் கூடுதலாக நீர்வரத்து கிடைத்திருக்கும் என யோசனை தெரிவித்துள்ளனர். எனவே ஏரியின் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.