தமிழ்நாடு

வேதாரண்யத்தில் ஆலிவ்ரிட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணி தொடக்கம் !

வேதாரண்யத்தில் ஆலிவ்ரிட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணி தொடக்கம் !

webteam

வேதாரண்யம் பகுதியில் அபூர்வ ஆலிவ்ரிட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணி துவக்கம் 880 ஆமை முட்டைகளை சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் வனத்துறை வைத்தனர்.

உலகில் அழிந்து வரும் அபூர்வ ஆமையினத்தை சேர்ந்த ஆலிவ் ரிட்லி ஆமைகளை விருத்தி செய்து பாதுகாக்க தமிழகஅரசு கடந்த 1983-ம் ஆண்டில் கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறையில் அமைக்குஞ்சு பொறிப்பகத்தை ஏற்படுத்தியது. ஆலிவ்ரிட்லி ஆமை முட்டைகள் சேகரித்து குஞ்சு பொறித்த உடன் அவற்றை வனத்துறையினர் கடலில் விட்டு வருகின்றனர். இதற்காக நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறை மற்றும் கோடியக்கரையில் அபூர்வ ஆலிவ்ரிட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கஜா புயலின் தாக்கத்தினால் இந்த சீசனில் கடற்கரைக்கு முட்டையிடுவதற்காக வரும் ஆமைகளின் எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளது. அப்படி வரும் ஆமைகளும் வேதாரண்யம் கடற்பகுதியில் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன கடந்த இரண்டு மாதங்களில் 30க்கும் மேற்பட்ட ஆலிவ்ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு சீசனில் 5 கட்டங்களாக ஆறுகாட்டுத்துறையில் 750 ஆமை முட்டைகளும் கோடியக்கரையில் 130 ஆமை முட்டைகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. குஞ்சு பொறிப்பதற்காக ஆமைக்குஞ்சு பொறிப்பகத்தில் குழி தோண்டி மண்ணில் புதைத்து வைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.