காட்பாடி அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் மோகன்தாஸ்(60). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது பக்கத்துவீட்டைச் சேர்ந்த 5-வயது சிறுமியை சாக்லேட் கொடுத்து ஏமாற்றி தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காட்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மோகன் தாஸை கைது செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளி மோகன்தாஸிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 6000 அபராதமும் விதித்து வேலூர் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து மோகன்ராஜ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.