மயிலாடுதுறை வயதான தம்பதி
மயிலாடுதுறை வயதான தம்பதி புதிய தலைமுறை
தமிழ்நாடு

மயிலாடுதுறை - “முதியோர் உதவித்தொகை வரல சார்..” மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து அழுத மூதாட்டி

PT WEB

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. அப்போது மூதாட்டி ஒருவர் தனது கணவரை அங்கு கைத்தாங்கலாக அழைத்து வந்தார். அப்போது ஆட்சியரை கண்ட மூதாட்டி, அவரது காலில் விழுந்து அழுதார்.

மயிலாடுதுறை

அப்போது பேசிய மூதாட்டி “கடந்த சில மாதங்களாக எனது கணவருக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து வங்கியில் கேட்ட போது, அதிகாரிகளை பார்க்குமாறு அனுப்பி வைத்தனர்.

அங்கு சென்றால் தபால்நிலையத்திற்கு செல்லுமாறு அலைக்கழித்தனர். நாங்கள் முதியோர் உதவித்தொகையை வைத்து மட்டுமே வாழ்கிறோம். என் மகனுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அவரும் கஷ்டப்படுகிறார். எங்களால் அவரிடமும் சென்று உதவி கேட்கமுடியவில்லை” என்று அழுகையுடன் கூறினார். அதனை அடுத்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியரை உடனடியாக அழைத்து அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார்.