chennai
chennai file image
தமிழ்நாடு

மாடு முட்டி படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு... மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!

யுவபுருஷ்

சென்னை திருவல்லக்கேணி பார்த்தசாரதி கோவில் வடக்கு மாட வீதியில், கடந்த 18ம் தேதி அன்று காலையில் சுந்தரம் என்ற 74 வயதான முதியவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு சுற்றித்திரிந்த காளை மாடு, நடந்து சென்ற முதியவர் சுந்தரத்தை முட்டித்தள்ளியது.

இதனால் காயமடைந்த முதியவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். முதியவரை மாடு முட்டியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த சுந்தரம், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பு அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஆதரவற்று சுற்றித்திரியும் மாடுகள் முட்டுவதால், பொதுமக்கள் காயமடையும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மாடுகளை அலட்சியமாக சுற்றித்திரியவிடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், " ஆதரவு இல்லாமல் சுற்றித்திரிந்த 3,853 மாடுகளை பிடித்துள்ளோம். அபராதம் விதித்த பிறகு அதனை செலுத்தும் உரிமையாளர்கள் அவற்றை மீண்டும் வெளியே விட்டுவிடுகின்றனர்" என்றார். தொடர்ந்து அவரது விளக்கத்தை கீழே இருக்கும் வீடியோவில் முழுமையாக பார்க்கலாம்.