தமிழ்நாடு

சென்னையில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை

சென்னையில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை

webteam

சென்னை பெருங்களத்தூர் அருகே மூதாட்டி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆர்.எம்.கே நக‌ரைச் சேர்ந்த காந்திமதி என்ற மூதாட்டி‌ வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டிருக்கிறார். கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். பணிக்கு சென்றிருந்த இவரது கணவர் வீடு திரும்பியபோது காந்திமதி கழுத்தறுப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து  இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலைசெய்தது யார் என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.