தமிழ்நாடு

திருவள்ளூரில் மூதாட்டி கார் ஏற்றி கொலை

திருவள்ளூரில் மூதாட்டி கார் ஏற்றி கொலை

webteam

திருவள்ளூரில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னையில் மூதாட்டி ஒருவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் சிறுபுழல்பேட்டையைச் சேர்ந்த பழனி என்பவர் தமது‌ மனைவி மல்லிகாவுடன் இணைந்து சீட்டு பிடித்து வந்துள்ளார். அதில், பழனியின் உறவினரான கந்தன் சீட்டு பணம் 3 லட்சம் ரூபாயை கடந்த 3 ஆண்டுகளாக கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். அதனால், இரு குடும்பத்திற்கும் இடையே ‌மோ‌தல் இருந்துவந்துள்ளது. இதற்கிடையில் சிறுபுழல்பேட்டைக்கு கந்தன் ‌வந்துள்ளார். அவரிடம் பழனியின் தாய் சீட்டுப்ப‌ணம் 3 லட்சம் ரூபாயை கேட்டுள்ளார்.

அதனால், ஆத்திரமடைந்த கந்தன் வீட்டுவாசலில் பேரக்குழந்தைகளுடன் அமர்ந்திருந்த பழனியின் தாய் ராணி மீது கார் ஏற்றியுள்ளார். அதில், மூதாட்டி ராணி உயிரிழந்தார். உறவினர்கள் விரட்டி செல்லும்‌போது கிணற்றில் விழுந்து கந்தன் காயமடைந்தார். கந்தனுக்கும்‌, அவரால் படுகாயமடைந்த 5 பேருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கந்தனின் நண்பர்கள் இருவரை காவல்து‌‌றையினர் கைது செய்தனர்.